
இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கமானது மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ,24 மணி நேரத்தில் (இன்று காலை வரை) 14,199 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையானது 1,10,05,850 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனாவின் பரவல் காரணமாக கேரள மாநில எல்லைகளை ,கர்நாடக அரசு தற்போது மூடியுள்ளது.கர்நாடக அரசு கூறுகையில் ,72 மணி நேரத்துக்கு முன்னர் எடுத்த கொரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே மாநில எல்லைக்குள் அனுமதிப்பதாக கூறியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் சுமார் 1,50,055 பேர் கொரோனா தொற்றிற்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் .மேலும் கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் 1,11,16,854 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றால் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்து வருகிறது.இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,87,65,423 ஆகும்.