இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா : ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா முழுவதும் அதிவேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,177 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 8,43,473 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Wed Apr 7 , 2021
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த மார்ச் 2020ல் 0.75% வட்டி விகிதத்தினையும், மே […]
sakthi-kandha-doss-RBI-Governer
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய