இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் – ஒரே நாளில் 45,951 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,94,27,330 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,98,454 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 60,729 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,37,064 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Next Post

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ..

Wed Jun 30 , 2021
கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு 2021 – 2022 கல்வி ஆண்டின் முதலாமாண்டு தொழில்நுட்பத்துறையில் மாணவர் சேர்க்கையானது, 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
admission-for-polytechnic-based-on-9th-marks
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய