தமிழகத்தில் நாளை முதல் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல் ..

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வ்ருவதன் காரணமாக நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

*நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

*மேலும் , ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*உணவகங்கள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும் பகல் 12 மணி முதல் 3 மணிவரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

*டீக்கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

*நாளை முதல் ஊரகப் பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

*சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை.

*பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், வாடகை ஆட்டோக்கள், கார்கள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

*அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*மருந்து வாகனங்கள், உணவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் பால் வாகனங்களுக்கு எந்த கட்டுப்படும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Thu May 6 , 2021
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று ஒரேநாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.இதில் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது . நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை […]
corona-virus-2-wave-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய