இந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது கடந்த 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும். இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,08,140 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,59,191 ஆக உள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,274 பேர் அடங்குவர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,97,740 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,51,209 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 41,16,230 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியே 29 லட்சத்தை கடந்துள்ளது.

Next Post

கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலக சுகாதார மையம் ..

Thu Nov 4 , 2021
கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து தயாரித்து வருகிறது.இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் பல நாடுகளுக்கு நட்பு ரீதியாக தடுப்பூசியை ஏற்றுமதி செய்து வருகிறது. பல நாடுகள் உலக சுகாதார மையம் அங்கீகரித்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே, நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளன.இந்நிலையில் உலக […]
WHO-approved-covaxin-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய