
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.18 கோடியை தாண்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,74,605 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,63,025 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,216 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 2,52,364 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 3,71,43,255 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை மறுபடியும் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.மேலும் நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.