இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,451 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,15,653 ஆக உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேரளாவில் 7,163, மராட்டியத்தில் 1,201, தமிழ்நாட்டில் 1,090 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,55,653 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,97,339 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,021 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,62,661 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 55,89,124 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 103 கோடியே 53 லட்சமாக உயர்ந்துள்ளது.

Next Post

புதுச்சேரியில் நவ.8 முதல் 1முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு..

Wed Oct 27 , 2021
புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரத்திற்கு 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது என்றும், நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் […]
school-open-in-pondicherry
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய