இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு ஒரு நாள் பாதிப்பு நேற்று குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,505, தமிழ்நாட்டில் 1,929, கர்நாடகாவில் 1,186, ஆந்திராவில் 1,413, அசாமில் 1,120 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 105, மகாராஷ்டிராவில் 68, ஒடிசாவில் 66 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 373 பேர் இறந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,682 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,11,80,968 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,88,508 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 51 கோடிய 45 லட்சமாக உயர்ந்துள்ளது..

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

மார்பர்க் எனும் புதிய கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு : உலக சுகாதார அமைப்பு..

Tue Aug 10 , 2021
மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.மார்பர்க் எனும் கொடிய வைரஸ் நோய், மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, அதன் பரவலை கண்டறிந்து தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா, கோவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து […]
Marburg-virus-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய