இந்தியாவில் ஒரு நாளில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.44 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,30 ,965 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2,104 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,54,880 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,657 ஆகும் .நாடு முழுவதும் இதுவரை 13,23,30,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்கு அனைவருக்கும் இலவச தடுப்பூசி - தமிழக அரசு

Fri Apr 23 , 2021
இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுதும் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி,தமிழகத்தில்18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 ஆம் தேதி முதல் இலவச தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொருட்டு 18முதல் 45 வயது […]
free-corona-vaccine-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய