இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : புதிதாக 42,909 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோன தொற்று தொடர்ந்து 3வது நாளாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக உறுதி செய்யப்படுவது பெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 42,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.27 கோடியாக ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,210 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,23,405 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,763 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,76,324 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 63.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

டெல்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளது - புதிய ஆய்வில் தகவல்

Mon Aug 30 , 2021
டெல்டா போன்ற புதிய வகை வைரஸ்களுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பு, மேக்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு தொடர்பான புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்விற்கு 597 நபர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 52 சதவீதத்தினர் […]
coronavirus-research-lab-test
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய