இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று : புதிதாக 44,658 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா தொற்று நேற்று 46,164 மற்றும் நேற்று முன்தினம் 37,593 ஆக பதிவாகி இருந்தது. இதனால் தொடர்ந்து 2வது நாளாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,03,188 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 496 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,36,861 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,21,428 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,44,899 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 61 கோடியே 22 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு : வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க அனுமதி..

Fri Aug 27 , 2021
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது . இந்நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளை திறப்பதற்க்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் : *பள்ளிகளில் 9 […]
school-reopening-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய