இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இருந்த பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,15,72,344 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,23,217 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,43,972 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,05,155 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 45,60,33,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு..

Fri Jul 30 , 2021
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி பொதுமுடக்கத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கானது 31-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த்தொற்று மாநிலத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டசெயல்பாடுகள் தவிர கூடுதலாக எந்தவித தளர்வுகளுமின்றி 31-7- 2021 முதல் 9-8-2021 […]
tamilnadu-extended-lockdown-with-relaxation
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய