இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கொரோனா தொற்று ..

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,207 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,61,79,085 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,102 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 2,31,456 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும் உயிரிழப்பு 1.18 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.48 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 17,93,645 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 21,85,46,667 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

‘2-டிஜி’ மருந்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு..

Wed Jun 2 , 2021
கொரோனா சிகிச்சைக்கான 2-டிஜி என்ற பவுடர் மருந்தினை கர்ப்பிணிகளுக்கு தரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2-டிஜி என்ற பவுடர் மருந்தை கொரோனா தொற்றில் இருந்து நிவாரணம் அளிப்பதற்காக டி.ஆர்.டி.ஓ. என்னும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வுக்கூடமான அணு மருத்துவம் மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பவுடர் வடிவிலான ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது. பவுடர் வடிவிலான 2-டிஜி மருந்தை அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு […]
2-DG-powder-Medicine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய