இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : புதிதாக 46,759 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோன தொற்று தொடர்ந்து 3வது நாளாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக உறுதி செய்யப்படுவது பெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,370 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,52,802 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 31,374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,59,775 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 62,29,89,134 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

தடுப்பூசி போட்டால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதி..

Sat Aug 28 , 2021
கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடியாக தடுப்பூசி போடும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று நந்தனம் கலைக் கல்லூரியில் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி திறக்கப்படுவதால், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகளிலும் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. 2 வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான […]
colleage-reopen-sep-1st
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய