இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,09,46,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 624 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 14,539, மகாராஷ்டிராவில் 7,243, ஆந்திராவில் 2,567, தமிழ்நாட்டில் 2,505, அசாமில் 2,169 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,01,04,720 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,11,408 ஆகும்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,29,946 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாடு முழுவதும் இதுவரை 38.76 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஆதார் சேவைகளை பெற புதிய ஏற்பாடு - இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பு..

Wed Jul 14 , 2021
இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது, ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும், செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாக மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை பெற, GVID (SPACE) என டைப் செய்து, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை பதிவிட்டு, 1947 என்ற எண்ணுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். ஆதாரின் விர்ச்சுவல் அடையாள எண்ணை திரும்ப பெற RVID (SPACE) என […]
UIDAI-AAdhar-change
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய