இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நான்காவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் தொற்றை முறியடித்து வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 91,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,92,74,823 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,403 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,77,90,073 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,63,079 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,34,580 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 60 லட்சத்து 85 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம் ..

Fri Jun 11 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 378 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,906-ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..
district-wise-corona-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய