இந்தியா முழுவதும் புதிதாக 17,407 பேருக்கு கொரோனா பாதிப்பு..மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ..

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .மேலும் பலி எண்ணிக்கை 89 ஆக உள்ளது .

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக17 ,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 1,11,56,923 ஆக உள்ளது .

மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி ,இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1,08,26,075 ஆகவும் ,கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,57,435 ஆக உள்ளது .

நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,73,413 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .மேலும் நாடு முழுவதும் 21,91,78,908 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ,புதன்கிழமை மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,66,16,048 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Post

மே 3 திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் : பள்ளி கல்வித் துறை அறிவிப்பு .

Thu Mar 4 , 2021
மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ,12 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்று கேள்வி அனைத்து தரப்பினரிடையே எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பையும் ,விளக்கத்தையும் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6 ஆம் […]
12th-public-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய