கொரோனா பாதிப்பு நிலவரம் -இன்று ஒரே நாளில் 48,698 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 48,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,01,83,143 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,183 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,91,93,085 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,94,493 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 64,818 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,95,565 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Next Post

"மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 " விரைவில் அறிமுகம்..

Sat Jun 26 , 2021
‘விண்டோஸ் 11’ இயங்குதளத்தை(ஓ.எஸ்) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு வருடத்திற்கு பிறகு தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்துள்ள விண்டோஸ் 11 இயங்குதளத்தை முந்தைய விண்டோஸ் 10 பயனர்கள் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்தில் பயனர்கள் எளிதில் உபயோகிக்கும் வகையில் அழகாகவும், புதுமையாகவும் இருக்கும்.இந்த இயங்குதளத்தில், ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் உள்ளிட்டவை எளிதில் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்டோஸ் 11 இயங்குதளத்தில், வன்பொருள் தனது […]
Microsoft-Windows-11
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய