இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த பாதிப்பு : புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி வேகமாக பரவுவதோடு, கட்டுப்படுத்துவதற்கும் பெரும் சவாலாக உள்ளது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில்1,038 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 14,71,877 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து : 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு

Thu Apr 15 , 2021
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையானது மிக தீவிரமடைந்து வருகிறது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கமானது படிப்படியாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை வலுத்து வந்தன. இதனைத்தொடர்ந்து மே 4 ஆம் தேதி நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வானது ரத்து செய்யப்படுவதாகவும் […]
CBSE-Board-Exams-cancelled-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய