இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது..

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.35 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆகும் .கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,67,457 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

டி.என்.பி.எஸ்.சி விடைத் தாள்களை பெற புதிய வசதி ..

Wed Apr 21 , 2021
டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் விடைத்தாள் நகலை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திடவும், பணி நியமனம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக தேர்வாணையம் புதிய இணையதள முறை ஒன்றை உருவாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டஅறிக்கையில்,தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள் […]
Tnpsc-answer-sheet-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய