இந்தியாவில் மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,17,69,132 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,25,757 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,09,33,022 ஆக உள்ளது.நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,668 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,10,353 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் இதுவரை 48,52,86,570 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்..

Wed Aug 4 , 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார்.இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார். முன்னதாக, முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. காலிறுதிப் போட்டியில், […]
vovlina-indian-boxer
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய