இந்தியாவில் தொடர்ந்து 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 15,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,01,743 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,189 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,42,901 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 22,844 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,07,653 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று 50,63,845 டோஸ்களும், இதுவரை செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 96.43 கோடியாகவும் உயர்ந்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயமில்லை - யுஜிசி அறிவிப்பு..

Wed Oct 13 , 2021
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயம் என்பதில் 2023-ம் ஆண்டு வரை விலக்கு அளித்துள்ளது. 2018-ல் கல்லூகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறையில் பல்கலைக்கழக மானியக்குழு 2023 வரை விலக்கு அளித்துள்ளது. யுஜிசி வழிகாட்டுதல் 2009 மற்றும் வழிகாட்டுதல் 2016 ஆகிவற்றின் அடிப்படையில் பிஎச்.டி. முடித்தவர்களுக்கு நெட் அல்லது செட் தேர்வு தகுதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், […]
UGC-Latest-News
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய