இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,85,920 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,50,963 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,579 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,14,900 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 95.89 கோடியாக உயர்ந்தது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லை : பொதுத்தேர்வு நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை திட்டவட்டம்

Tue Oct 12 , 2021
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.மேலும் நடுநிலைப்பள்ளி வகுப்புகள் தொடங்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, வருகிற 1-ந்தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே […]
10th-to-12th-half-yearly-exam-cancelled
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய