இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு ..

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.77 கோடியாக உள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3617 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,78,011 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,512 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 2,84,601 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 22,28,724 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 20,89,02,44 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Sat May 29 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் முழு ஊரடங்கானது மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 3,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் […]
district-wise-corona-in-tamilnadu-29-5-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய