இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 8,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,56,401 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 197 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,63,852 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,61,756 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,971 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,30,793 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 112,97,84,045 கோடி பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 59,75,469 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் - உயர்கல்வித் துறை திட்டவட்டம்..

Tue Nov 16 , 2021
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து […]
semester-exam-conduct-directly-in-college
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய