இந்தியாவில் புதிதாக மீண்டும் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் ,உயிரிழப்பு சற்று அதிகரித்து கொண்டே வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,71,57,795 ஆக உள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,157 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,43,50,816 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,11,388 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 2,95,955 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 24,95,591 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 20,06,62,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நாடு முழுவதும் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..

Wed May 26 , 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக நாடு பெரும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில்,கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில், இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய அரசு […]
Black-fungus-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய