இந்தியாவில் ஒரே நாளில் 89 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 13 .08 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 89,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 714 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,15,69,241 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,64,110 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 6,58,909 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 7,30,54,295 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு - ICRB வெளியீடு..

Sat Apr 3 , 2021
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ICRB வெளியிட்டுள்ளது.இஸ்ரோ ஆராய்ச்சி காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Indian Space Research Organization (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்): காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் : ISRO Centres: Administrative Officer – 04Accounts Officer – 04Purchase & Stores Officer – […]
ISRO-Recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய