இந்தியாவில் தற்போது குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 2,81,386 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோன பாதிப்பு கடந்த வாரம் முழுவதும் 4 லட்சத்தை கடந்த பாதிப்பு தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை கடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,49,65,463 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,106 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,74,076 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,74,390 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 35,16,997 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 18,29,26,460 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்..

Mon May 17 , 2021
உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 260 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணுக்கு அனுப்பி வருகிறது.இதுவரை பல கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]
Space-X-Falcon-9-satellite
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய