இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 3,60,960 பேருக்கு தொற்று உறுதி ..

இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் வருகின்றன. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,97,267 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3293 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்தின் அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 29,78,709 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 14,78,27,367 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு தகவல் ..

Wed Apr 28 , 2021
தற்போது இந்தியாவில் கொரோனா அதிவேகமாக பரவுவதற்கு இந்த உருமாறிய கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு இடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன. இந்தியாவில் தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உருமாறிய கொரோனா வைரஸின் வகை என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது. […]
mutate-corona-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய