
பிரான்சில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை செல்போன் மூலம் பரிசோதனை செய்ததில் 90% துல்லியமான முடிவு கண்டுபிடிக்கப்பட்டதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ,பிரான்சில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,064 -ஐ எட்டியுள்ளது .
இந்நிலையில் செல்போன் மூலம் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கும் சோதனையில் துல்லியமான முடிவுகள் கணிக்கப்பட்டுவருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் .
CORDIAL – 1 என்ற பெயரில் 300 கொரோனா மாதிரிகளை சோதனை செய்யும்போது 90 சதவீதம் துல்லியமாக முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .சளி மாதிரியை கண்டறியும் கருவியை செல்போனில் இணைப்பதன் மூலம் 10 நிமிடங்களில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது .மேலும் 1000 பேருக்கு செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் .