இந்தியாவில் 60 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.66 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,08,910 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,61,240 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 4,52,647 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 5,81,09,773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

"VOTER HELPLINE " சேவையின் பயன்பாடுகள் என்னென்ன?

Mon Mar 29 , 2021
இந்தியத் தேர்தல் ஆணையமானது வாக்காளர்களின் பயன்பாட்டிற்க்காக பல்வேறு செயலியை அறிமுகப்படுத்தி வருகிறது.இதில் ஒன்றாக “VOTER HELPLINE ” செயலியும் குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தல் முதல் மக்களவை தேர்தல் வரை வாக்களிக்க வேண்டுமானால்,அவர்களின் பெயரானது, இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.பொதுவாக, நாம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டுமென்றாலோ அல்லது திருத்தும் செய்ய முற்பட்டாலோ, தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் முகாம்களுக்கு சென்று திருத்தும் செய்ய […]
Voters-Helpline
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய