இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,80,47,534 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,56,92,342 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,100 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 2,38,022 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 20,26,092 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 21,31,54,129 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 34,48,66,883 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Next Post

காற்றில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா - வியட்நாமில் கண்டுபிடிப்பு..

Mon May 31 , 2021
உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.தற்போது இந்த வைரஸ் உருமாறி வருகிறது. தற்போது உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் […]
mutated-coronavirus-in-vietnam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய