இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 59,118 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.60 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,64,637 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,949 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 4,21,066 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 5,55,04,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி..

Fri Mar 26 , 2021
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமானது படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்று கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.இதில் குறிப்பாக,மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்மடங்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக பரவுவதற்கு முகக்கவசம் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது அல்லது கைகழுவாமல் இருப்பது போன்றவையே காரணமாக அமைகிறது.கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பொதுமக்களாகிய […]
corona-vaccine-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய