
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,44,882 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 396 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,66,980 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,67,962 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10,264 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,09,940 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது கடந்த 539 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.நாடு முழுவதும் நேற்று 90,27,638 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 119 கோடியே 38 லட்சத்தை கடந்துள்ளது.