இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,838 பேருக்கு கொரோன பாதிப்பு : மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,838 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது .

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 16,838 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,73,761 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) அறிக்கையின் படி ,இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,39,894 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1,57,548 ஆக உள்ளது .

இந்தியா முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,76,319 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .மேலும் நாடு முழுவதும் 21,99,40,742 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .நேற்று (வியாழக்கிழமை) மாலை நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,80,05,503 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Post

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்..புதிய தேர்வு அட்டவணை வெளியீடு ...

Fri Mar 5 , 2021
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிபிஎஸ்இ 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதியானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகசிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது . ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால் (அதாவது பிறை முன்கூட்டியே அல்லது மறுநாள் தெரியும் நிலையில்) அன்றைய நாட்களில் நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளின் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்குமாறு சு .வெங்கடேசன் எம்.பி அவர்கள் […]
cbse-revised-exam-date-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய