இந்தியாவில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா பாதிப்பு : மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா ..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தாக்கமானது, குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,53,303 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,306 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,97,237 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 2,61,64,920 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தேர்தலுக்கு பிறகு நடத்த முடிவு : பள்ளிக்கல்வித் துறை ..

Fri Mar 12 , 2021
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6 தேதி நடைபெற இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது .இதனிடையில் அனைத்து பாடங்களையும் விரைவில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாளே பிளஸ் 2 பொதுத் தேர்வும் தொடங்கிவிடுகிறது. […]
12-students-with-practical-exam
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய