இந்தியாவில் 39 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,13,92,159 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 167, கேரளாவில் 132 பேர் உள்பட நாடு முழுவதும் 546 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,20,016 ஆக உயர்ந்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,05,03,166 ஆக உள்ளது.நேற்று ஒரே நாளில் 35,087 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 42.78 கோடியாக உயர்ந்துள்ளது.இதில், இன்று காலை 7 மணி வரையிலான நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,67,799 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : தற்போதைய பதக்கப் பட்டியல் நிலவரம்..

Sat Jul 24 , 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் தற்போதைய நிலவரப்படி சீனா 2 தங்கபதக்கம் வென்று உள்ளது. இகுவடார், ஈரான், தென் கொரியா, கொசோவோ ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கபதக்கம் வென்று உள்ளன. கொரோனா பெருந்தொற்று உலகமுழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் சீனா இன்று முதல் தங்கத்தை வென்றிருக்கிறது .பெண்கள் […]
tokyo-olymbic-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய