இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா : புதிதாக 43,263 பேருக்கு தொற்று..

corona-patient-in-india

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட இன்று 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,39,981 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,749 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,04,618 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,93,614 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 71,65,97,428 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

சிறந்த கல்வி நிறுவன பட்டியல் வெளியீடு : சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்..

Thu Sep 9 , 2021
சிறந்த கல்வி நிறுவன பட்டியலை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. 2-வது இடத்திலும், மும்பை ஐ.ஐ.டி. 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தில் உள்ளது. வேலூர் சி.எம்.சி. 3-வது இடத்தில் உள்ளது.சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தை […]
chennai-ITI
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய