
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில் ,தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்ததோடு ,எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
சர்வதேச புள்ளிவிவரங்கள் படி , கொரோனா 3வது அலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ,எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.சுற்றுலா , புனித யாத்திரை பயணம், மத உற்சாகம், அனைத்தும் தேவை என்றாலும், இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம் எனவும்,தடுப்பூசி போடாமல் மக்களை இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிப்பது 3-வது அலையை உறுதி செய்வதாகும் என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.