பேசினாலே பரவும் கொரோனா தொற்று – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின் அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால் அதை சுவாசிப்பவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அல்லது பேசும் போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள் 2 மீட்டர் தூரத்துக்குள் கீழே விழுந்துவிடும்.இதன் மூலம் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

‘ஏரோசோல்’ :

‘ஏரோசோல்’ என்பது எச்சிலின் சிறிய துகள்கள் ஆகும்.இவை காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும் தன்மை கொண்டது. இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும்.காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ அல்லது கண்களையோ தொட்டால் அவர் தொற்றால் பாதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மூடப்பட்ட இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்கள் போன்ற இடத்தில இந்த ஏரோசோல்கள் விழுந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும்.

வைரஸ் தொற்றை தடுக்க நாம் பின்பற்றவேண்டியவை :

*வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமிநாசினிகளை பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

*முக்கியமாக அனைவரும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் இருப்பது நல்லது. ஏனென்றால் காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

*வீடுகளில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைத்திருப்பது நம் அனைவருக்கும் நல்லதாகும்.இவற்றின் மூலம் கொரோனா பரவலை நாம் எளிதில் தடுக்கலாம்.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகக்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

Thu May 27 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகக்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 30,582 பேருக்குத் தொற்று உள்ளது.தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்த நிலையில், கோவையில் தொற்று […]
beds-for-Tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய