
கொரோன பொதுமுடக்கத்தின் காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில் ,தற்போது பிப்ரவரி 8 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .
இதன்படி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் ,கொரோனா தொற்று பரவல் காரணமாக ,கல்லூரிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது .
மேலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் ,சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் ,கல்லூரி நிர்வாகமானது கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு கட்டாயம் கிருமி நாசினிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ,இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் தொடர்ந்து 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது .இதன்படி பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் திறக்கப்படும் கல்லூரிகள் தொடர்ந்து 6 நாட்கள் செயல்படும் .