10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் 10-ஆம்வகுப்பு மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக்டோபர் 4-ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Post

‘மக்கள் பள்ளி திட்டம்’ - மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் திட்டம் : பள்ளிக்கல்வித்துறை..

Fri Oct 1 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டாலும், சில மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கற்றல் குறைபாடுகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கையாக அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு ரூ.200 கோடி […]
Makkal-palli-thittam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய