மெகா ஸ்டார் சிரஞ்சீவி – இயக்குனர் மோகன் ராஜா மெகா கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் மோகன் ராஜா குறிப்பிடத்தக்கவர். இவர் எடிட்டர் மோகனின் மூத்த மகனும் ,நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரும் ஆவர் .

இவர் தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்தவர் .2015 ஆம் ஆண்டு இவர் இயற்றிய தனிஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது .மற்றும் பல்வேறு வெற்றி படங்களையும் கொடுத்தவர் ஆவர் .

இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் ஆன சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது .இயக்குனர் மோகன் ராஜா இறுதியாக சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கினார் .தற்போது மெகா ஸ்டாரை வைத்து படம் இயக்குவது மகிழ்ச்சியை தரும் என தெரிவித்துள்ளார் .இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது ….

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது .தான் தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு ஹனுமன் ஜங்ஷன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மீண்டும் தெலுங்கில் இயக்கப்போகிறேன் .இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் ,ஆசிர்வாதங்களும் தேவை என தெரிவித்துள்ளார் .

தற்போது தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆச்சார்யா திரைப்படத்தில் இரட்டைவேடங்களில் நடித்து வருகிறார் .இத்திரைப்படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார் .

Next Post

விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி -50 (PSLV C -50) செயற்கைக்கோள் : ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை (டிச.17) விண்ணில் பாயும் PSLV C -50 !!

Wed Dec 16 , 2020
நாளை (வியாழக்கிழமை) மாலை 3.41 மணியளவில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி -50(PSLV C-50) செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது .இந்த செயற்கைக்கோளானது ஆறு உந்து விசை சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது . ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்படும் 77 வது ராக்கெட் பிஎஸ்எல்வி சி -50 செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது . விண்ணில் வெற்றிகரமாக பாயவுள்ள […]
PSLV-C-50-2020-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய