விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பிய சீனா..

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனா தனது சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகளை மேற்கொண்ட சீனா, ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது.

தற்போது சீனா 3 விண்வெளி வீரர்களை மீண்டும் தனது விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. லாங்கு மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங், யே குவாங் பு ஆகிய 3 வீரர்களும் விண்வெளிக்கு முதல்முறையாக சென்றனர். இதில் ஒரு பெண் வீராங்கனையும் அடங்குவார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி குழுவினரை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. அவர்கள் 3 மாதங்கள் தங்கி விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை செய்து விட்டு பூமிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் 3 வீரர்களை அடங்கிய இந்த ராக்கெட் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று நள்ளிரவு ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களில் விண்கலம் தனியாக பிரிந்து புவி வட்ட பாதையில் நுழைந்தது. விண்கலம் சுமார் 6½ மணி நேர பயணத்துக்கு பிறகு சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.

இந்த 3 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்துக்கான அடுத்தக்கட்ட பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள் என்றும் விண்வெளி நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான கருவிகளை நிறுவ அவர்கள் விண்வெளி நடைபயணங்களை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Sat Oct 16 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 15,022 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,968 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 160 பேரும், கோவையில் […]
district-wise-corona-updates-16-10-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய