
நிலவின் மேற்பரப்பில்,சீனாவின் செங்கொடி நிலவில் பறக்கும் படத்தை சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி ஆனது நிலவின் மேற்பரப்பில் சீனா ஆனது நாடு வைத்துள்ளது .
1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்குக்கு அனுப்பிய அப்பல்லோ-11 விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை அமெரிக்கா நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் என்பவர் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனையடுத்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது.
சாங்கே – 5 லேண்டர் விண்கலம் :
சாங்கே – 5 லேண்டர் விண்கலமானது , சீனாவின் கொடியை நிலவில் நாட்டியது. இந்த விண்கலம், சந்திரனில் இருந்து, பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு, 15 கிலோமீட்டர் தொலைவில் சந்திரனில் இருந்து சுற்றிக் கொண்டு இருக்கும் விண் சுற்றுக்கலனுக்கு கொண்டு சென்றுள்ளது.இந்த விண்கலம், சீனாவின் மங்கோலிய உள் பகுதிகளில் தரையிறங்க இலக்கு வைத்து பயணிக்கும் என கூறப்படுகிறது .
சீனாவின் கொடி:
அமெரிக்கா முதன் முதலில் நிலவில் கொடியை நாட்டிய போது இருந்த உற்சாகம் மற்றும் உத்வேகமும் ,சீனா கொடியை நாட்டியபோது இருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
சீனாவின் கொடி 2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும், சுமார் ஒரு கிலோ எடையும் கொண்டது. சீன கொடியின் எல்லா பகுதியிலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.இதில் ,அதிக அளவில் குளிரைத் தாங்கும் அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன .
(சீனா முதன் முதலில் நிலவில் தரையிறங்கிய போது, சீனாவின் தேசியக் கொடி நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டது. சாங்கே-4 லேண்டர் மற்றும் ரோவர் 2019இல் கொடியை நிலவின் இருட்டான பக்கத்திற்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது)