
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சியானது இன்று முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் காட்சி அரங்கில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.புத்தகக் காட்சிக்கு நுழைவுக்கட்டணமாக வாசகர்கள் ரூ .10 செலுத்தவும் ,பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுச் சீட்டினை இணையவழியிலும் பெற்றுக்கொள்ளலாம் .
சென்னை புத்தகக் காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஓவியம் ,பேச்சுப் போட்டி மற்றும் வினாடி -வினா ஆகியவை நடத்தப்பட உள்ளது .மேலும் ,உலக அறிவியல் தினம் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறும் 44 வந்து புத்தகக் காட்சியில் ‘ரேக்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .இதன் மூலம் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சிப்படுத்தலாம் .