CTET 2021 தேர்வு முறைகளில் மாற்றம் – CBSE அறிவிப்பு..

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) நடத்துகிறது.இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்களே பணியில் நீடிக்க முடியும் அல்லது பணி வாய்ப்பினை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த CTET தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் நடப்பாண்டில் CTET தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி கேள்வித்தாள் குறைவான உண்மை அறிவு மற்றும் கருத்தியல் புரிதல், பயன்பாடு, சிக்கல் தீர்க்கும், பகுத்தறிவு மற்றும் விமர்சன சிந்தனை ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக CTET தேர்வு முறைகளில் மாற்றம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு CTET தேர்வு அல்லது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த உள்ள தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், விண்ணப்பதாரர்கள் இலவசமாக தேர்வு மையங்களை தேர்வு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் CTET தேர்வு தேதிகள், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான அட்டவணை தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கல்வி தொலைக்காட்சி : ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களுக்கான கால அட்டவணை வெளியீடு..

Mon Aug 2 , 2021
கல்வி தொலைக்காட்சி மூலம் இந்த வாரத்திற்க்கான(ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8) ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாட வகுப்புகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
kalvi-tv-schedule
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய