12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருப்பதால்,மே 3 ஆம் தேதி நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு மே 31 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இதர தேர்வுகள் முன்பு அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் பின்னர் தெரிவிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.