
தமிழ் வளர்ச்சி துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 17ம் தேதி வரை மூலச் சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பதிவிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழி பெயர்ப்பு) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 10.11.2021 முதல் 17.11.2021 தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவு பணிகளில் கலந்துகொள்ள விருப்பம் இல்லை எனக்கருதி விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.