2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் – ஓர் பார்வை ..

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதி பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தார் .கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் ,இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல .நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்யும் 3 வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் ,உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, வளர்ச்சி, மனித மூலதனம், புதுமை மற்றும் ஆர் அன்ட் டி, இயற்பியல் உள்கட்டமைப்பு போன்ற 6 வகை சிறப்பம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் :

மக்கள் நலன் மற்றும் சுகாதாரத்துறை :

  • மக்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறைக்காக மத்திய படஜெட்டில் இருந்து சுமார் 2 ,23 ,846 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .
  • கொரோனா தடுப்பூசிக்காக மத்திய பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்பட்ட தொகையானது 3,500 கோடி ரூபாய் ஆகும்.
  • ஜல் ஜீவன் மிஷன் அர்பன் மற்றும் மிஷன் போஷன் 2.0 ஆகிய திட்டங்களை மத்திய அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன்டீ தனது உரையில் கூறியுள்ளார் .
  • நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ .1 .4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
  • பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டத்திற்கு ரூ.64 ,180 கோடி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் முறையில் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.3,726 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .
  • 42 பெருநகரங்களில்(29. 10 லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும்) காற்று மாசைக் குறைக்க ரூ.2,217 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது .

நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு :

  • தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 217 திட்டங்களுக்கு சுமார் ரூ .1 கோடிக்கு மேல் செலவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குறிப்பாக நெடுஞ்சாலை பணிகளில் தமிழ்நாட்டில் ரூ .65,000 கோடி முதலீட்டில் 3,500 கி.மீ தூரதில் சாலை வசதி அமைக்கப்படும் எனவும் , ரூ .95,000 கோடி செலவில் கேரளாவில் 1,100 கி.மீ, மேற்கு வங்கத்தில் 675 கி.மீ. மற்றும் அசாமில் 1,300 கி.மீ. தொலைவில் சாலை வசதியானது அடுத்த 3 ஆண்டுகளில் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
  • கன்னியாகுமரி – கேரளா போன்ற பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
  • 11 ,000 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் .

மின்சாரம் ,எரிவாயு மற்றும் குடிநீர் :

  • ரூ .1.97 லட்சம் கோடியை பல்வேறு பி.எல்.ஐ திட்டங்களுக்கு இந்த ஆண்டு முத்த அடுத்த 5 ஆண்டு வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
  • எரிவாயு விநியோக அமைப்பில் அடுத்த மூண்டு ஆண்டுகளுக்குள் 100 நகரங்கள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • ரூ .1000 கோடியானது சூரிய ஆற்றல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது .
  • மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்காக ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .
  • மின்னணு உற்பத்தித் திட்டங்களுக்காக பி.எல்.ஐ.க்கு ரூ .40,951 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது .

வங்கி மற்றும் பொதுத்துறை:

  • ரூ .20,000 கோடி நிதியானது பொதுத்துறை வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .
  • எல்.ஐ.சி பங்குகளை விற்கும் திட்டமானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் ஏர் இந்தியாவின் பங்குகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • வங்கி டெபாசிட் காப்பீடு தொகையானது ரூ .1 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது .

கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறை :

  • நாடு முழுவதும் 15 ,000 பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும் என்றும் மேலும் 100 புதிய சைனிக் பள்ளிகள்உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • ரூ 35,219 கோடி நிதியானது ஆதி திராவிட மாணவ -மாணவியரின் நலனுக்காக ஒதுக்கப்படுகிறது .
  • லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகமானது நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த பற்றிய தகவல்களை சேகரிக்க தனி இணையதளம் உருவாக்கப்படும் என
  • குறைந்தபட்ச ஊதியமானது அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் நிர்ணயம் செய்யப்படுகிறது .

விவசாயம் மற்றும் வேளாண்மை :

  • விவசாயிகளின் நலனுக்காக விவசாயிகளின் கடன் இலக்கை ரூ .16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் .
  • 2020 -21 ல் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையானது ரூ .1 .72 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது .
  • வங்காளம் மற்றும் அசாம் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ரூ .1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரயில்வேத் துறை :

  • மத்திய பட்ஜெட்டுக்கு ரயில்வே துறையில் சுமார் ரூ .1.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
  • மெட்ரோ ரயில் திட்டமானது 27 நகரங்களில் விரிவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
  • ரயில்வே துறையில் பல புதிய வழித்தடங்கள் அமைக்கப்படும் எனவும் ,மும்பை -குமரி இடையே புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • சென்னையில் உள்ள 2 -ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ரூ .63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .

வரி விதிப்பு :

  • செப்பு கிராப் மீதான சுங்க வரி 2.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது .
  • மத்திய அரசானது சிறு நிறுவனங்களின் அதிகபட்ச நுழைவு மூலதனத்தை ரூ .50 லட்சத்திலிருந்து ரூ .2 கோடியாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
  • வேளாண் வரியானது பெட்ரோலுக்கு ரூ .2 .5 ,டீசலுக்கு ரூ .4 ம் விதிக்கப்பட்டுள்ளது .
  • வரி விதிப்பானது கீழ்கண்ட பொருளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பருத்தியில் 5%, கச்சா பாமாயில் 17.5%, கச்சா சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய், 2.5% தங்கம், வெள்ளி மற்றும் டோர் பார்கள் ;100% மது பானங்கள், 30% காபூலி சானா, 10% பட்டாணி, 50% பெங்கால் கிராம் / சிறிய பட்டாணி, 20% பயறு போன்ற பொருட்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

Next Post

பி.எஸ்.எல்.வி சி -51 செயற்கைக்கோள் பிப்ரவரி 28 -ல் விண்ணில் பாய்கிறது ..

Sat Feb 6 , 2021
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி -51 (PSLV C51)செயற்கைக்கோளானது பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . பி.எஸ்.எல்.வி சி -51(PSLV C51) செயற்கைகோளுடன் ,தனியார் துறையினர் தயாரித்துள்ள ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளும்,சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனி சாட் போன்ற 3 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளது […]
PSLVC51-satellite
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய